Posts

Showing posts with the label HEALTH

PAPER CUP FOR STOMACH PAIN?

Image
மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் பேப்பர் கப்களில் தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது. மெழுகு பூசப்பட்ட "கப்'களில், அதிக‌ சூடான, காபி அல்லது டீ நிரப்பப்படும் போது, வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது. அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது. "டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்

12 symptomps of Kidney disease

DailyHealthTips.in suggests we heed certain kidney symptoms before it is too late! Most people are not aware of the fact that kidney diseases can be silent killers. They may not show any symptoms for a long time till the situation becomes critical. It is important to recognize the symptoms of kidney diseases to catch them early. Here is a list of twelve such symptoms you should look out for: 1. C hanges in your urinary function: The first symptom of kidney disease is changes in the amount, frequency of your urination. There may be an increase or decrease in amount and/or its frequency, especially at night. It may also look more dark coloured. You may feel the urge to urinate but are unable to do so when you get to the restroom. 2. Difficulty or pain during voiding: Sometimes you have difficulty or feel pressure or pain while voiding. Urinary tract infections may cause symptoms such as pain or burning during urination. When these infections spread to the kidneys they ma...

வொர்க் அவுட்ஸ் - சில தவறான கருத்துக்களும் விளக்கங்களும்....

Image
தொந்தியைக் குறைப்பதற்கு சிறந்த வழி நமது வயிற்றுப் பகுதிக்கு அதிக பயிற்சி கொடுக்க வேண்டும். இது ஒரு தவறான கருத்து. நம்மில் பலர் எந்த இடத்தில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து இருக்கிறதோ, அந்த இடத்தில் உள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் கொழுப்பு கரைந்து தொந்தி குறையும் என்று எண்ணுகிறோம். ஆனால் ஆய்வுகள் தெரியப்படுத்துவது என்னவென்றால், நாம் பயிற்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கொ ​​ ழுப்புகள் கரைவதில்லை. இப்படிச் செய்வதற்கு பதில், நாம் உடற்பயிற்சியுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் நமது உடம்பிலுள்ள கொழுப்புகள் எல்லா இடங்களிலும் சீராகக் குறையும் போது நமது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பும் கரைந்து தொந்தி குறையும். வாரத்துக்கு இரண்டு நாட்கள் உடற்பயிற்சி செய்தாலே நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு போதுமானது. இதுவும் தவறான கருத்து. எப்படி விட்டமின்கள் நமது உடலுக்கு தினசரி தேவையோ, அதுபோல மிதமான உடற்பயிற்சியும், நமக்கு தினசரி தேவை. ஏனென்றால், உடற்பயிற்சிகளால் ஏற்படும் நல்ல மாற்றங்களை 48 முதல் 72 மணி நேரங்கள் வரைதான் நமது தசைகளால் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆ...

LED lights can damage your eyes: Study

Image
The so-called ecofriendly LED lights may cause permanent damage to your eyes, a new research has claimed. The study found that exposure to light-emitting diode (LED) lights can cause irreparable harm to the retina of the human eye.    Once the retina cells are destroyed by prolonged and continuous exposure to LED rays, they cannot be replaced and will not regrow, Think-Spain.com reported.    Researchers said this is caused by the high levels of radiation in the 'blue band' , and is likely to become a global epidemic in the medium term given that computer, mobiles and TV screens, and even traffic and street lights, have been gradually replaced with LED. Experts are calling for the lights to have built-in filters to cut out the blue glare.  Dr Celia Sanchez Ramos, investigator at Madrid's Complutense University, said the retina never regenerates itself once it has become damaged. Ramos said LED lights are made up of rainbow longitude waves, and it is ...

காய்கறிகளிலேயே இருக்கிறது மருத்துவ குணங்கள்

Image
நாம் சாப்பிடும் பல காய்கறிளிலேயே ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அவற்றை அறிந்து, உகந்த படி சாப்பிட்டால் நலமாக வாழலாம். முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடலில் சேரும் கிருமிகள் வெளியேறும். பீன்ஸ், அவரைக்காய், கீரைகள் உண்பதால் மலச்சிக்கல் வராது. நார்த்தங்காய் பித்தத்தைத் தணிக்கும். மாங்காய் சாப்பிட்டால் தாது பலம் பெறும். மலக்குடல் சுத்தமாகும். பசி அதிகரிக்கும். பிடிக்கருணைக் கிழங்கு, புடலங்காய் உண்பதால் மூலத்தை அகற்றலாம். அவரைக்காயில் புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள் இருப்பதால் நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச்சிக்கல் இருப்பவர்கள் அதிகம் சாப்பிடலாம். இரவில் சாப்பிட வேண்டாம். மூல நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் அத்திக்காயில் உள்ளது. பூசணி, முள்ளங்கியில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால் நீர் பிரிந்து பசியைத் தூண்டும். கோவைக்காயை சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப் புண், நாக்குக் கொப்புளம் சரியாகும். ​​ அதேப்போல, முட்டைக்கோஸ், அகத்திக்கீரை வாய்ப்புண், குடல் புண்களை ஆற்றும். வாழைத்தண்டு சிறுநீர்ப் பாதையில் இருக்கும் கல்லைக் கரைக்கும். வெந்தயக் கீரை...

வெள்ளரி - 25 மருத்துவ பயன்கள்

1. காய்கறிகளுள்ளே குறைவான கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும்கலோரி 18தான். 2. விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயைப் பழவகையில் சேர்த்துள்ளனர்; ஆனால், மக்கள் இதைக்காய்கறிப் பட்டியலில் சேர்த்துள்ளனர்;பச்சையாகவும், சமையலில் சேர்த்தும் சாப்பிடுகின்றனர். 3. வெள்ளரிக்காய், குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத் தனிச் சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது. சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது. 4. இக்காய் பித்தநீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது. 5. அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகளை, வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமைமிக்க உணவாகத் திகழ்வதையும் நிரூபித்துள்ளன. 6. ஆந்திர உணவில் எப்போதும் வெள்ளரிக்காயும் பாசிப்பருப்பும் கலந்து தயாரிக்கப்படும் பச்சடி உண்டு. காரணம்,ஆந்திரசமையலில் காரம் அதிகம். 100கிராம் வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் ஈரப்பதம் உள்ள...

பணத்தையும் நேரத்தையும் சேமிக்க ஆரம்பிக்கவும். ( மருத்துவர்கள் / மருத்துவமனை தேடி செல்ல !!!)

நம் உடலில் ஏற்படும் கழிவுகளின் தேக்கமே நோயாக மாறுகிறது. 1. மலசிக்கல். 2. சளி  3. கெட்ட கொழுப்பு 4. கெட்ட சர்க்கரை 5. உப்பு. இந்த கழிவுகளை முறையாக சுத்தம் செய்யாவிடில் அங்காங்கே தேங்கி உள்  உறுப்புகள் செயல்பாட்டில் குறுக்கிடுகிறது. முதலில் கழிவுகளை வெளியேற்றுவதில் கவனம் வேண்டும். பிறகு கழிவு தேங்காத வண்ணம் உணவு வகைகளை மாற்றவேண்டும்.  கழிவுகள் வெளியேற : எண்ணெய் கொப்பளிப்பு - தண்ணீர் மருத்துவம் - எனிமா குவளை மூலம் மலக்குடல் சுத்தம் - மூச்சு பயிற்சி. குறைவான கழிவுகள் உள்ள உணவு : இயற்கை உணவினால் மட்டுமே சாத்தியம் கழிவுகள் இல்லாத தேகம் சுத்த தேகம். சுத்த தேகத்தில் நோய்கள் குடியிருக்க அனுமதி இல்லை !! சுத்த தேகம் பெற வழிமுறைகள் : 1. எண்ணெய் கொப்பளிப்பு. (செய்முறை கீழே தரப்பட்டுள்ளது) 2. கரிசாலை ..வேம்பு ..கருவேலம். நாயுருவி வேர் போன்ற மூலிகை பல் பொடியால் பல் துலக்குவது. 3. தண்ணீர் மருத்துவம் - பல் துலக்கியபின் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் இளஞ்சூடான தண்ணீர் குடிப்பது.   4. இயற்கை எனிமா குவளை கொண்டு மலக்குடல் தூய்மை செய்வது. 5. மூச்சு பயிற்சி. ( நுரையீரல் சுத்...

அனைவரும் கொய்யா சாப்பிடலாமே..!

கொய்யாப்பழத்தில் ஊட்டச்சத்து அதிகம். ஆரஞ்சுப் பழத்திலிருக்கும் வைட்டமின் சி போல இதில் நான்கு மடங்கு அதிகம். இதைக் கடித்துச் சாப்பிடுவதால், பற்களும் ஈறுகளும் பலம் பெறுகின்றன. கொய்யாப் பழத்தால் குடல், வயிறு, ஜீரணப்பை, மண்ணீரல், கல்லீரல் ஆகியவை வலிமை பெறுகின்றன. உணவு ஜீரணமாவதற்கும் நல்லது. இரவு உணவுக்குப் பின் நன்றாகக் கனிந்த கொய்யாப் பழங்களை சாப்பிட்டால் மலச்சிக்கலே இருக்காது. பல்முளைக்கும் குழந்தைகளுக்கு கொய்யாப் பழங்களை தினமும் கொடுத்தால் பற்கள், ஈறுகள் உறுதியாகும். கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை,களில் மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றது. கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயத்தின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு. கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்...

மூலிகை மருந்து: வெந்தயம்

சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது. * ஆரம்பக்காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேலை, ஒரு வேலைக்கு 12.5 கிராம் (தோராயமாக இரண்டு தேக்கரண்டி) என்ற அளவில், இரண்டு முக்கிய உணவுகளாகிய காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்தும் கொள்ளலாம் * வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊரவைத்தோ அல்லது பொடியாக இடித்து தண்ணீரிலும் மற்றும் மோரிலும் கலந்தோ உணவிற்கு 15 நிமிடங்கள் முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும். * இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட விதைகள் அல்லது பொடியாக இடித்தெடுக்கப்பட்ட விதைகளை, தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் செய்யும் போது அவற்றுடன் இணைந்து பயன்படுத்தலாம். இப்படி செய்யும்போது விதைகளின் கசப்புத்தன்மை ஓரளவிற்கு குறைகிறது. * இவைகளை தயார் செய்யும்போது உண்பவரின் ருசிப்புத்தன்மைக்கேற்ப உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம். * இரத்தத...

தர்பூசணி நீர்மோர்

Image
​​ தேவையானப்பொருட்கள்: தர்பூசணி (விதை நீக்கி நறுக்கியது) - 1 கப் தயிர் - 1/2 கப் எலுமிச்சம் பழச்சாறு - 1/2 டீஸ்பூன் இஞ்சி - ஒரு சிறு துண்டு மிளகுத்தூள் - சிறிது உப்பு - ஒரு சிட்டிகை புதினா - சிறிது சாம்பார் வெங்காயம் - 2 செய்முறை: தர்பூசணித்துண்டுகள், தயிர், இஞ்சி, புதினா ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்தெடுத்து, அத்துடன் எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து, குளிர்பதனப் பெட்டியில் வைத்து குறைந்தது அரை மணி நேரம் குளிர விடவும்.நறுக்கிய சாம்பார் வெங்காயம், புதினா மற்றும் இரண்டொரு தர்பூசணித்துண்டுகளைத் தூவி பரிமாறவும்.

​ பீட்ரூட் சாறு

Image
​​ பீட்ரூட் சாறு மனிதர்களின் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். லண்டன் மருத்துவக் கல்லூரியும் பார்ட்ஸ் சுகாதார ம ையமும் இணைந்து நடத்திய ஆய்வில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் தெரியவந்தன. தினசரி 250 மிலி லிட்டர் பீட்ரூட் சாறு குடித்தால் ஒருவரின் உயர் ரத்த அழுத்தம் சுமார் 10 எம் எம் அளவால் குறைந்து போனது ஆய்வில் தெரிய வந்தது. பதினைந்து பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவில் உயர்ரத்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்த பலருக்கும் ரத்தஅழுத்தம் சராசரி அளவுக்கு குறைந்ததாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்தன. இவர்கள் பீட்ரூட் சாற்றை குடித்து மூன்று முதல் ஆறுமணி நேரம் கழித்து இவர்களின் உயர் ரத்த அழுத்தம் கணிசமாக குறைந்ததாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்தனர். மேலும் மறுநாளும் கூட இவர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைந்தே காணப்பட்டதாகவும் இவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஆய்வு முடிவு பற்றி மருத்துவ நூலான ஹைபர்டென்ஷன் தெரிவித்துள்ளது. ரத்த நாளங்கள் விரிவடையும் பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் சத்து மனிதர்களின் ரத்தநாளங்களை விரிவடையச் செய்க...

வாழைப்பூ-மருத்துவக் குணங்கள்:-

இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூவூம் ஒவ்வொரு விதமான அழகையும் மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது. வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது. சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை நோயை சித்த மருத்துவத்தில் மதுமேக நோய் என்பார்கள். குறிப்பாக தென்னிந்தியாவிலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்பவர்களில் 60 சதவீதத்திற்கு மேல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்னர். சர்க்கரை நோய்க்கு மூலகாரணம் நம் உணவு முறையே. தற்போது நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதில்லை. இரசாயனம் கலந்த உணவையே சாப்பிட நேரிடுகிறது. மேலும், போதிய உடற்பயிற்சியின்மை, சில நேரங்களில் அதிக வேலைப்பளு, சரியான நேரத்திற்கு உணவருந்தாமை போன்றவையால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்து சர்க்கரை நோயை உண்டாக்குகின்றன. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச்...

​​​​ கிவி – 8 டிப்ஸ்

​​ 1. கிவியில் மிகவும் குறைவான அளவில் கலோரிகள் உள்ளன. ஒரு கிவி பழத்தில் சுமார் 3.8 கலோரிகள் உள்ளன. 2. உடலின் எடையைக் குறைக்கும் ஆர்வமுடையவர்கள் இந்தக் பழத்தை பாதுகாப்பாக அன்றாடம் உண்ணலாம். 3. இதில் வைட்டமின் 'சி' அதிக அளவில் உள்ளது.நோயைத் தடுக்கும் ஆற்றல் அதிகம் பெற்றுள்ளது. முதுமையின் காரணமாக ஏற்படும் சிதைவு நோய்களான, கண் புரை, விழித்திரை சிதைவு நோயைத் தடுக்கின்றது. 4. இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது. 5. கிவி பழத்தில் ஒமேகா-3 மற்ற பழங்களை விட மிகவும் அதிகமான அளவில் உள்ளது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. 6. சர்க்கரை மிகவும் குறைவான அளவாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக் கூடிய சிறந்த பழம் இது. 7. கிவியில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும். 8. இதிலுள்ள வைட்டமின் ஈ பெண்களின் சருமத்தை பொலிவுடன் வைத்திருக்கும்.

​​​​ கொத்தமல்லி கொத்தமல்லி

​​ என்ன சத்துக்கள்? கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாகும் அத்தனை சத்துக்களும் இதில் இருக்கிறது. 100 கிராம் கொத்தமல்லியிலுள்ள ஊட்டச் சத்து கலோரி 20 மாப்பொருள் 4 g - நார்ப்பொருள் 3 g கொழுப்பு 0.5 g புரதம் 2 g உயிர்ச்சத்து ஏ 337 μg 37% உயிர்ச்சத்து சி 27 mg 45% என்ன பலன்கள்? இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது. இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது. கொத்துமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த சூடு தணியும், சிறுநீர், வியர்வையைப் பெருக்கும். கண்கள் பலப்படும். பித்தத் தலைவலி நீங்கும் சளி, வறட்டு இருமல் மற்றும் மூக்கடைப்பு குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஒரு எளிய ரெசிபி - கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு வெண்ணெய் - 1 டீஸ்பூன் கார்ன் ஃப்ளார் - 2 டீஸ்பூன் உப்பு & மிளகுத...

வேர்கடலை... ஏழைகளின் புரதம்...!

Image
வேர்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளது. புரதம், லைசின் என்ற அமினோ அமிலம் உள்ளது. இந்தப் புரதம் முட்டை மற்றும் மாமிசத்தில் இருந்து கிடைக்கும் புரதத்திற்கு இணையானது. அதனால் வேர்க்கடலை வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கிறது. எப்படி சாப்பிடலாம்? சமையலில் பல வித உபயோகங்கள் உள்ளது வேர்க்கடலையை சமைக்காமலேயே பச்சையாக தோலூரித்து உண்ணலாம். இல்லை வறுத்து உப்புடன் சாப்பிடலாம். அல்லது வேக வைத்தும் சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் மிகவும் சுவையாக இருக்கும். வேர்க்கடலையை ஏற்கனவே சமைத்த உணவுகளுடன் சேர்த்தால் அவற்றின் சுவை கூடும். அவித்த வேர்க்கடலையில் சாலட் செய்து சாப்பிடலாம். வெல்லம் சேர்ந்து வேர்க்கடலை பர்பி செய்து சாப்பிடலாம். என்ன பலன்கள்? வேர்கடலையை வேக வைத்து சாப்பிட, உடல் பருமன் குறையும், அதையே வறுத்துச் சாப்பிட உடல் எடை கூடும். ரத்தம் ஓட்டம் சீராகும். ரத்த அழுத்தம் குறையும். நரம்புகள் நன்றாகச் செயல்படச் செய்யும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன் களைத் துரிதப்படுத்தும் தன்மை...

​​வாயுத் தொல்லை ஏற்படக் காரணம்

வாயுத் தொல்லை! இந்தப் பிரச்சினை இல்லாத மனுஷங்களே இருக்க முடியாது. எத்தனை பெரிய ஆளா இருந்தாலும், தர்மசங்கடத்துல தர்ற பிரச்சினை இது . ஒருத்தர் ஒரு நாளைக்கு ஆசன வாய் வழியா 14 முறை வாயுவை வெளியேத்தறது சாதாரணமானதுன்னு சொல்றாங்க மருத்துவர்கள். இந்த வாயுத் தொல்லை ஏன் வருது? உணவு செரிமானமாகி, வயித்துலேர்ந்து சிறுகுடலுக்குப் போகும். மீதி உணவு பெருங்குடலுக்குத் தள்ளப்படும். அந்த மிச்ச உணவில் ஆபத்தில்லாத பாக்டீரியா கிருமிகள் நிறைய இருக்கும். மிச்ச மீதி உணவோட, அந்த பாக்டீரியா சேர்ந்து, உணவு புளிச்சு, வாயுவா மாறுது. இந்த வாயுவில் நாற்றம் இல்லாதவரைக்கும் பிரச்சினை இல்லை. நாற்றமும் சத்தமும் அதிகமானா, அது ஏதோ உடல்நலக் கோளாறுக்கான அறிகுறினு எடுத்துக்கலாம். அதை சாப்பாடு மூலமா சரி செய்யலாம். அதுக்கு முன்னாடி வாயுவை உற்பத்தி பண்ற உணவுகளைப் பத்திப் பார்க்கலாம். அளவுக்கதிகமாக வாயுவை உற்பத்தி செய்கிற உணவுகள், மிதமான வாயுவை உற்பத்தி பண்ற உணவுகள், குறைந்த வாயுவை வெளியேத்தற உணவுகள்னு மூணு வகை. முதல் வகைல பால் மற்றும் பால் பொருள்கள், பிராக்கோலி, காலிஃப்ளவர், குட்டி முட்டைகோஸ்,...

வாழைப்பூவின் மகத்துவம்

Image
வாழைப்பூவும், அதன் தண்டும் கூட‌ மருத்துவ குணமுள்ளவை. வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருக்கிறது.அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு 'பி' வைட்ட‌மின் கிடைக்கிறது பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் நல்லது. வாரத்தில் இரண்டு நாள்களாவது உணவில் இதை சேர்த்துக் கொண்டால் நல்லது வாழைத் தண்டு நரம்புச் சோர்வை நீக்கும், குடலில் சிக்கிய கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் தினமும் குடித்து வந்தால், வறட்டு இருமல் நீங்கும். ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் ரத்த ஓட்டம் சீராகும். வாழைப்பூ மூலக்கடுப்பு, ரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.மலச்சிக்கலைப் போக்கும் . வாழைப்பூவை பொரியல் அல்லது கூட்டாக செய்து சாப்பிடலாம். அடையாகவும் வடையாகவும் கூட செய்து ருசியாக சாப்பிடலாம். வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.

மிளகு நமது பாரம்பரிய உணவு

Image
மிளகு நமது பாரம்பரிய உணவு. இது ஓர் இந்தியப் பொருள். அந்தக் காலத்தில் உணவுக்குக் காரம் கொடுக்க மிளகையே பயன்படுத்தினர். பின்னர்தான் மிளகாய் வந்தது. 'பத்து மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்' என்பது சொல்லாடல். உணவில் உள்ள விஷத்தன்மையை முறிக்கும் பண்பு மிளகுக்கு உண்டு என்பதையே இந்த சொலவடை குறிப்பிடுகிறது. என்ன பலன்? மிளகு வயிற்றில் ஜீரண என்சைம்களைத் தூண்டி ஜீரணத் தன்மையை அதிகப்படுத்துகிறது. வயிற்றில் உள்ள வாயுவை அகற்றி, உடலுக்கு உஷ்ணத்தைத் தருவதுடன், வீக்கத்தையும் குணப்படுத்தும். தொண்டைக் கமறல், ஜலதோஷம் குறையும். சுவாசக் கோளாறுகள் நீங்கும். வயிற்றுப் பொருமலும் அஜீரணமும் குணமாகும். நல்ல பசி எடுக்கும். தொண்டைப் புண், வறட்டு இருமல் குறையும். தலைவலி குணமாகும். அடுக்குத் தும்மல், பீனிசம், மண்டைக்குத்து, நீர்க்கோவை குணமாகும்.

தெரிந்துகொள்வோம் - பனை

பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என் னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும். பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு. நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும். பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும். த...

ஆப்பிளும்... ஆரோக்கியமும்..!

நாம் அன்றாடம் உணவை உட்கொள்ளும் பொழுது சில நேரங்களில் அஜீரணம் காரணமாக புளித்த ஏப்பம், வயிறு ஊதல், மலச்சிக்கல் போன்ற பல தொல்லைகள் உண ்டாகும். இந்த தொல்லைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ள மருந்துகளையும், செரிமான டானிக்குகளையும் உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பெரும்பாலானோர் உண்ணும் உணவை செரிப்பதற்கும், போதைக்கும் குறைந்தளவு மதுவை அருந்துவதுண்டு. இவ்வாறு சிறிய அளவில் ஆரம்பிக்கும் மதுபோதை பழக்கம் நாட்கள் செல்லச் செல்ல கடும் போதைக்கு அடிமையாகும் வாய்ப்புக்கு ஆளாகின்றனர். இது போன்ற மது போதை அடிமைகளை மீட்கவும், அன்றாடம் உடல் ஆரோக்கியம் மேம்படவும் நம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுதல் நல்லது. இவற்றில் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழங்களே. பைரஸ் மேலஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போமேசியே குடும்பத்தைச் சார்ந்த ஆப்பிள் மரங்கள் குளிர்ச்சியான பிரதேசங்களில் ஏராளமாக விளைகின்றன. கருஞ்சிவப்பு நிறத்தோலை உடைய ஆப்பிள் பழங்களே உண்ணத் தகுந்த பழங்களாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆப...