Posts

Showing posts with the label self-confidence

​ நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால்

​​ நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால், உங்கள் எதிர்காலத்தைப் பற்றிய வெற்றி பெறும் சிந்தனையையே எப்போதும், இடைவிடாது, உறுதியாக பிடித்துக் கொள்ளுங்கள். உங்களது பணியில் நீங்கள் சிறப்பாகச் செய்ய முடியாது என்று யாரும் உங்களுக்குத் தெரிவிக்கவோ, யோசனை கூறுவதற்கோ இடமளிக்க வேண்டாம். உங்கள் மீதான் உங்கள் நம்பிக்கைதான் உங்களது வெற்றிக்கான ஆதாரமாகும். வெற்றிபெற முன்னேறுவதைப் போல் நடந்து முன்னேறிச் செல்லுங்கள். உங்களைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இந்த உணர்வை ஏற்படுத்துங்கள். வெற்றி உங்கள் கண்களிலிருந்து உறுதியுடன், ஆவேசமான தீர்மானத்துடன் ​​ வெளிப்படுவதற்கு அனுமதியுங்கள். அப்பொழுதுதான், நீங்கள் வெற்றியால் உருவாக்கப்பட்டு, வெற்றிபெறும் பழக்கம் கொண்டவராக இருப்பதால், உங்களை அதைரியப்படுத்தக்கூடிய எந்த விசயமும் இல்லை என்று மக்கள் தெரிந்து கொள்வார்கள். நீங்கள் ஒரு முதலாளியாக இருந்தால், நம்பிக்கையோடு வெற்றிபெறும் உணர்வோடு ஒரு வெற்றியாளராக உங்களது அன்றாட வேலைக்கு வருகிறீர்களா அல்லது சந்தேகத்தோடு, நம்பிக்கையில்லாத, ஒரு தோல்வியுற்ற மனிதராக வருகிறீர்களா என்பதை உங்கள் பணியாளர்க...

பிரச்னையை எதிர்கொள்வது எப்படி?....

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்னை இருந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும், தினசரி புதிய பிரச்னைகளும் வந்து கொண்டிருக்கின்றன. உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்னை. நாளை தீர்க்க வேண்டிய பிரச்னை. சில நாள் அல்லது சில மாதங்கள் கழித்து தீர்க்க வேண்டிய பிரச்னை என பிரச்னைகளின் வகைகளைப் பிரித்து வைத்துக் கொண்டு, அதனை எதிர்கொண்டு தீர்க்க முயல வேண்டும். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் கடன் பிரச்னை, தொழில் பிரச்னை, குடும்பப் பிரச்னை, தொழிலை வெற்றிகரமாகச் செய்யும்போது எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை என அடுக்கடுக்காக வருகிறது என வருத்தப்பட்டார். ஆனால், அவர் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல் முடங்கி விடவில்லை. கடன்காரர்கள் வந்தால் சளைக்காமல் பதில் கூறுவார். தொழிலாளர்கள் பிரச்னையை சாதுரியமாகப் பேசி முடிப்பார். வாழ்க்கையே போராட்டம்தான் என்பார். எந்தப் பிரச்னை வந்தாலும் அதில் மூழ்கிவிட வேண்டாம். சதா பிரச்னைகளை எண்ணிக் கொண்டிருந்தால் பிரச்னை தீராது. ஒரு பிரச்னையைத் தீர்க்க பல வழிகளை யோசிக்க வேண்டும். பிரச்னை குறித்து அலசி ஆராய வேண்டும். எந்த முடிவு என தீர்மானம் செய்ய வேண்டு...

சொந்தக்காலில் நில்லுங்கள்...

ஒருவனுக்கு தன்னம்பிக்கையே அடிப்படை. அதில் இல்லாதவன் தெய்வ பக்தி இல்லாத நாத்திகனைப் போன்றவன். விடாமுயற்சி மட்டும் நம்மிடம் இருந்துவிட்டால் நம்மால் சாதிக்க முடியாத செயல் என்று எதுவுமே இல்லை. என்னால் முடியாது என்று ஒருபோதும் சொல்வது கூடாது. எல்லாவற்றையும் சாதிக்கக்கூடிய வல்லமை நம்மிடம் இருக்கிறது. சுயநலம் என்பது சிறிதும் மனதில் இருப்பது கூடாது. அதை தூர எறிந்துவிட்டு ஆக்கப் பூர்வமான பணிகளில் ஈடுபடுங்கள். நீங்கள் சிங்கம் போன்றவர்கள். செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளிவிட்டு உற்சாகத்துடன் செயலாற்றுங்கள். தன்னைத்தானே தாங்குபவனாக, சொந்தக்காலில் தலைநிமிர்ந்து நிற்கும் பலமுள்ளவனாக செய்ய வல்ல கல்வித்திட்டம் நமக்குத் தேவை. உயர்ந்த லட்சியங்களை மனதில் உருவாக்குங்கள். எப்போதும் அதை அடைவதற்கான சிந்தனையில் ஈடுபடுங்கள். சிந்திப்பதை செயல்படுத்தும் துணிவையும், மனவலிமையையும் தியானத்தின் மூலம் நம்மால் பெற முடியும். - விவேகானந்தர்

மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்..!

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியு ம் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர். ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, "என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார். ... அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர். முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்." இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்." மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்." வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள். அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால...

வாழ்கையில் தொடர் வெற்றி பெற மூன்று வரிகளை ஞாபகம் கொள் (REMEMBER 3 THINGS FOR SUCCESS )

Image
எந்த ஒரு மனிதனும் வாழ்கையில் வெற்றி பெற பலவழிகளில் போராடுகிறான். அந்த போராட்டத்தை அர்த்தமுள்ளதாக்க கீழ்க்கண்ட மூன்று வரிகளை கடைபிடித்தால் உங்கள் வெற்றி இன்னும் சுலபமாகும். 1. உங்களைச் சுற்றியுள்ளவர்களை விட அதிகமாக தெரிந்துகொள்ள வேண்டியவைகளை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நேரம் வரும்போது அவர்களை விட நீங்கள் 'புத்திசாலி' என்று காட்டிக் கொள்வதற்கு மிகவும் தேவைப்படும். 2. மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக வேலை செய்யும் பழக்கத்தை ஏற்ப்படுத்திக் கொள்ளுங்கள். அது உடல்வேலைகளை காட்டிலும் மூளைக்கு வேலை அதிகம் கொடுங்கள். முக்கியமாக மற்றவர்களின் வேலைப் பளுவை குறைப்பதற்கான எளிய வழியை கண்டுபிடிக்க உழையுங்கள். 3. மற்றவர்களின் எதிர்பார்ப்பைவிட குறைவாக எதிர்பாருங்கள். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக எதிர்பார்க்கிறீகளோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக எதிர்பார்ப்பதைவிட பன்மடங்கு உங்களுக்கு கிடைக்கும். ஒரு சிறந்த தலைவன், சிறந்த நிர்வாகி இவ்வாறு தான் உருவாகிறார்கள் என்பதை இதன்மூலம் தெரிந்து கொள்ளுங்கள். இனிமேல் உங்களுக்கும் தொடர் வெற்றி தான்.