சொந்தக்காலில் நில்லுங்கள்...

ஒருவனுக்கு தன்னம்பிக்கையே அடிப்படை. அதில் இல்லாதவன் தெய்வ பக்தி இல்லாத நாத்திகனைப் போன்றவன்.

விடாமுயற்சி மட்டும் நம்மிடம் இருந்துவிட்டால் நம்மால் சாதிக்க முடியாத செயல் என்று எதுவுமே இல்லை.

என்னால் முடியாது என்று ஒருபோதும் சொல்வது கூடாது. எல்லாவற்றையும் சாதிக்கக்கூடிய வல்லமை நம்மிடம் இருக்கிறது.

சுயநலம் என்பது சிறிதும் மனதில் இருப்பது கூடாது. அதை தூர எறிந்துவிட்டு ஆக்கப் பூர்வமான பணிகளில் ஈடுபடுங்கள்.

நீங்கள் சிங்கம் போன்றவர்கள். செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளிவிட்டு உற்சாகத்துடன் செயலாற்றுங்கள்.

தன்னைத்தானே தாங்குபவனாக, சொந்தக்காலில் தலைநிமிர்ந்து நிற்கும் பலமுள்ளவனாக செய்ய வல்ல கல்வித்திட்டம் நமக்குத் தேவை.

உயர்ந்த லட்சியங்களை மனதில் உருவாக்குங்கள். எப்போதும் அதை அடைவதற்கான சிந்தனையில் ஈடுபடுங்கள்.

சிந்திப்பதை செயல்படுத்தும் துணிவையும், மனவலிமையையும் தியானத்தின் மூலம் நம்மால் பெற முடியும்.

- விவேகானந்தர்

Comments

Popular posts from this blog

8 Best CMSs for building a well structured social networking website

​ PHP Web Programming and Business Benefits of PHP Development