Posts

Showing posts with the label child-food

ஒரே மாதிரி சாப்பாடு கொடுத்தால் குழந்தைகள் சாப்பிடாது.

1. குழந்தைகள் உங்களைப் போலவே சாப்பிடவேண்டும் என நினைக்காதீர்கள். அவர்கள் சாப்பிடும்போது உணவு சிந்தும். உடலெல்லாம் அழுக்காகும். அதற்காக குழந்தையைத் திட்டுவதோ, அட ிப்பதோ தவறு. இது குழந்தைகள் உணவை வெறுக்க ஒரு காரணமாகிவிடும். 2. குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவின் அளவு ரொம்ப முக்கியம். எந்த அளவுக்கு குழந்தைக்குத் தேவையோ அந்த அளவுக்கு மட்டும் ஊட்டுங்கள். “இன்னும் ஒருவாய் சாப்பிட்டா நல்லது தானே” என்பதெல்லாம் தவறான எண்ணங்கள். 3. குழந்தைகள் அவர்களாகவே உண்ணப் பழக்குங்கள். அவர்களுடைய உண்ணும் ஆர்வத்தை இது அதிகப்படுத்தும். உணவு சிந்தும், டேபிள் அழுக்காகும், ரொம்ப நேரமாகும். என்றெல்லாம் கவலைப்படாதீர்கள். 4. கொஞ்சம் சோறு சாப்பிடும்மா சாக்லேட் வாங்கி தரேன். கொஞ்சம் கீரை சாப்பிடும்மா குர்குரே வாங்கி தரேன். என்பதெல்லாம் அம்மாக்கள் செய்யும் தவறுகள். குழந்தை என்ன நினைக்கும் ? சோறும், கீரையும் மோசமானவை. அதை எப்படியாவது சமாளிச்சுட்டா சூப்பர் சாக்லேட், குர்குரே கிடைக்கும் என்று தானே ? இது குழந்தைகளுக்கு சோறு, கீரை இவற்றின் மீதெல்லாம் வெறுப்பு வர காரணமாகிவிடும். 5. என் பிள்ளைக்கு இனிப்பே க...