Posts

Showing posts with the label fast-food

காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க,,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காளான், பேல் பூரி, பானி பூரி விற்கும் தள்ளுவண்டிக் கடைகள் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கில் ம ுளைத்திருக்கின்றன. ஒரு பிளேட் ரூ. 10 என்பதால் மாலை நேரத்தில் இக்கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் மொய்க்கிறது. மாணவர்கள், தொழிலாளர்கள் என பல தரப்பினரும் தினமும் விரும்பி காளான் உட்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். சிலர், மனைவி, குழந்தைகளுடன் கூட கடைகளின் முன் நின்று ருசிக்கின்றனர். அவற்றை உண்பதால் ஆரோக்கியத்துக்கு கேடு ஏற்படும் என்பதை பற்றி, பலரும் அறியாதவர்களாகவே உள்ளனர். பெரும்பாலான கடைகளில் 'காளான்' என்ற பெயரில் விற்கப்படும் 'அயிட்டம்' காளான் இல்லை என்பதே உண்மை. முட்டைக்கோஸ், மைதாமாவுடன் உப்பு சேர்த்து பிசைந்து எண்ணையில் வடை போல பொறித்து வைத்துக்கொள்கின்றனர். பின்னர் சிவப்பு நிறமேற்றுவதற்காக ஜிலேபிபவுடர், காரத்துக்கு மிளகாய்த் தூளை தண்ணீரில் கரைத்து, வாணலியில் ஊற்றி, அவற்றுடன் ஏற்கனவே பொறித்த முட்டைக்கோஸ் மைதாமாவு கலவை 'வடை'களை போட்டு வேக வைத்து வாடிக்கையாளருக்கு பிளேட்டில் பரிமாறுகின்றனர். இவற்றில் காரமும்,...

நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு

"நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு" - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு. யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது? அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. 'இன்சைட்' என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார். விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்...

CHICKEN IN FAST FOOD

அடிக்கடி ஒரு செய்தி சென்னை பத்திரிக்கைகளில் வருகிறது, நாம் திரைப்பட பகுதி மற்றும் ஜோதிடம்\ஆன்மிகம் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாத காரணத்தால் இந்த செய்தி நமது கண்களில் படுவதில்லை, அது “கெட்டுப்போன மாமிசம் எழும்பூர் ரெயில் நிலையத்தில் கைப்பாற்றப்பட்டது, மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை”, பிறகு மீண்டும் சில நாள் கழித்து மற்றோரு செய்தி வரும் இது தொடர்கதை, ரெயிலில் ஏற்றும் போது என்ன செய்தார்கள் பத ில் இல்லை? கெட்டுப்போன மாமிசம் என்று தகவல் சொன்னவர்கள் யார் தகவல் இல்லை, ரெயில்வே நிர்வாகம் என்ன செய்கிறது தகவல் இல்லை, சுமார் 70 சதவீத மக்கள் உணவாக பயன்படுத்தும் மாமிசத்தின் மீதான அக்கரை இது கப்பம் சரியாக வராத நேரத்தில் பிலிம் காட்ட இது போன்ற ரெய்டுகள் அதாவது ஜஸ்ட் வார்னிங் அடுத்து, 1- மாட்டு மாமிசம் சாப்பிட மாட்டேன் என்று நடிப்பவர்களும் தங்களை அறியாமலேயே மாட்டு மாமிசம் உண்கின்றனர். “முக்கியமாக பள்ளிக்கூட மற்றும் மருந்து கடைகளை விட அதிகம் இருக்கும் சாராய கடைகளின் முன்பு”, 2. கடைகாரர்கள் ஒரு கோழி என்ன விலைக்கு வாங்குகிறார்கள் என்று பார்த்தால் 5 ரூ முதல் 8 ரூ வரை தான் ஆம் கோழிப்பன்னைகளில் நெரி...