2030ல் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறும்: அமெரிக்க அறிக்கையில் தகவல்
வாஷிங்டன்: வரும் 2030ம் ஆண்டில் இந்தியா பொருளாதார வல்லரசாக இருக்கும் எனவும், சீனாவை மிஞ்சி உலக பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் எனவும் அமெரிக்க புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், இந்தியாவும், சீனாவும் இணைந்து செயல்பட முடியாது. தற்போது பொருளாதாரத்தில் இந்தியாவை விடசீனா முன்னிலையில் இருக்கலாம். ஆனால் இந்தியாவுக்கான வாய்ப்பு 2015ம் ஆண்டு வருகிறது. வரும் 2030ம் ஆண்டிற்கு பிறகு, ஆசியாவிற்கே தூண்டுகோலாக இருக்கும் இந்தியா, சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல் உலக அதிகாரமுள்ள நாடாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அமெரிக்க உளவு நிறுவனம் குளோபல் டிரென்ட் 2030 என்ற தலைப்பின் கீழ் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் பாகிஸ்தான் பற்றிய பேச்சே இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. வரும் 2020ம் ஆண்டில் மக்கள் தொகையில் சீனாவில் அதிகம் பேர் இந்தியர்களை விட மூத்தவராக இருப்பர். அந்த காலகட்டத்தில் சீனாவின் பொருளாதாரம் குறைய துவங்கும் நேரத்தில், இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்கும். தற்போது உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இருக்கும் இ...