Posts

Showing posts with the label agricultural

காடு மாதிரி வளர்த்தால்.. காசு பார்க்க முடியும்!

எனக்க 22 ஏக்கர் நிலம் இருக்கு. 5 ஏக்கரில் சவுக்கும், 5 ஏக்கரில் தைல மரமும் இருக்கு. மீதி 12 ஏக்கரில் நெல் சாகுபடி பண்ணிட்டிருக்கிறேன். ஆனால், எங்க பகுதியில் வெலையாட்கள் கிடைப்பது குதிரைக் கொம்புதான். அதே போல், உழைப்பிற்கு ஏற்ற லாபமும் இல்லாததால், நெல் சாகுபடியை முழுயைாக கைவிட்டுட்டு, மொத்தத்திற்கும் மரங்களை வைக்கலாம் என்று நினைக்கிறேன். அதற்கான ஆலோச னை கிடைக்குமா என்று பசுமை விகடனின் நேரடி குரல் பதிவு சேவை மூலமாக ஆதங்கக் குரலைப் பதிவு செய்திருந்தார், புதுக்கோட்டை மாவட்டம், கீழ்ச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன். இவருக்கு ஆலோசனை சொல்ல புதுக்கோட்டை மாவட்டம், சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த மரம் தங்கசாமி. பாலசுப்ரமணியத்திடம் பேசி, பிரச்சனையை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட தங்கசாமி.. இதற்காக ஒட்டு மொத்தமாக நெல் உற்பத்தியையே கைவிடறேன் என்று சொல்வது நமக்கும் நல்லதல்ல நாட்டிற்கம் நல்லதல்ல. அதற்காக தொடர்ந்து அவஸ்தைப்பட்டுக் கொண்டே இருக்கணும் என்ற அவசியமும் இல்லை. அதிகமான பரப்பில் நெல்லு பயிரிட்டால்தானே எல்லா பிரச்சனையும். இரண்டு ஏக்கரில் ம்டும் நெல் பயிர் செய்து பாருங்க. பிரச்சனைகள் மிகவு...

‎"வாருங்கள், விவசாயம் செய்வோம்!"

"வேறு எதையும்விட, இன்றைக்கும் விவசாயம்தான் லாபகரமான தொழில். ஒரு நெல் விதைத்தால், ஆயிரம் நெல் விளையும். ஒரு எள் விதைத்தால், ஆயிரம் எள் விளையும். ஆனால், ஒரு கிலோ பிளாஸ்டிக்கில் இருந்து, முக்கால் கிலோ பிளாஸ்டிக்தான் எடுக்க முடியும். ஒரு கிலோ இரும்பை உருக்கினால், அரை கிலோ தான் கிடைக்கும். ஒன்றை ஆயிரம் ஆக்குவது லாபமா? ஒன்றைப் பாதி ஆக்குவது லாபமா?'' - அவர் கேட்பதில் இருக்கும் உண்மை சுரீர் என்று உறைக்கிறது. அவரை ஒரு மணி நேரம் பேச விட்டுக் கேட்டால், 'மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டு ஊருக்குக் கிளம்பிரலாமா?' என்று நகரத்தில் வேலை பார்க்கும் எந்த விவசாயி வீட்டுப் பிள்ளையும் நினைப்பான். அழிவின் விளிம்பில் நிற்கும் விவசாயத்தின் மீது நம்பிக்கை விதை விதைக்கிறார் பாமயன். சுமார் 15 ஆண்டுகளாக இயற்கை விவசாயம்குறித்து மாநிலம் முழுவதும் பயிற்சி அளித்துவருவதில் முக்கியமானவர். வேளாண் விளைபொருட்களை லாபகரமாக விற்பது எப்படி என்பதை நடைமுறையில் செய்துகாட்டும் வேளாண் பொருளியல் நிபுணர். மதுரை திருமங்கலத்தில் இருந்து குற்றாலம் செல்லும் சாலையில், சோலைப்பட்டி கரிசல் மண் தோட்டத்தில் பாமயனைச் சந்தித...