Posts

Showing posts with the label child

பச்சிளம் குழந்தை பராமரிப்பு

Image
1. பச்சிளம் குழந்தைகளுக்கு பவுடர் பயன்படுத்தத் தேவையில்லை. பயத்த மாவு அல்லது வேறு எதுவும் பூச வேண்டாம். சருமத்தில் இருக்கும் துவாரங்கள் அடைத்துக் கொண்டால் பிரச்னை ஏற்படும். இயற்கையாக விட்டுவிடுதலே நலம். 2. ஆயில் மசாஜ் செய்யலாம். வேப்பண்ணெய் தவிர்த்து வேறு எந்த எண்ணெயும் பயன்படுத்தலாம். 3. சீப்பு பயன்படுத்தி தலை வாறுவதில் தவறில்லை. ஆனால் அது தேவையும் இல்லை. கைகளால் கோதிவிடலாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மெல்லிய பற்களை உடைய சிறிய சீப்புகளை பயன்படுத்தலாம். 4. குழந்தைகளுக்கு வாசனை திரவியங்கள் அவசியமே இல்லை. தவிர்ப்பது நல்லது. 5. நம்முடைய ஊரின் தட்பவெப்பத்துக்கு ஏற்றது பருத்தி ஆடைகள் மட்டுமே. சின்தடிக் பயன்படுத்துவது குழந்தைக்கு சவுகர்யமாக இருக்காது. 6. நாப்கின் அணிவிப்பத்தை கூடுமானவரையில் தவிர்ப்பதே நல்லது. வெளியில் தூக்கிச் செல்லும் போது மட்டும் பயன்படுத்துதல் நல்லது. டயாபரில் குழந்தை சிறுநீர் அல்லது மலம் கழித்துவிட்டு வெகு நேரம் அது சருமத்தில் படும் போது கெமிக்கல் ரியாக்ஷன் ஏற்படலாம். அது ஒவ்வாமை ராஷஸ் போன்ற பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். 7. பச்சிளம் குழந்த...