பச்சிளம் குழந்தை பராமரிப்பு

1. பச்சிளம் குழந்தைகளுக்கு பவுடர் பயன்படுத்தத் தேவையில்லை. பயத்த மாவு அல்லது வேறு எதுவும் பூச வேண்டாம். சருமத்தில் இருக்கும் துவாரங்கள் அடைத்துக் கொண்டால் பிரச்னை ஏற்படும். இயற்கையாக விட்டுவிடுதலே நலம்.

2. ஆயில் மசாஜ் செய்யலாம். வேப்பண்ணெய் தவிர்த்து வேறு எந்த எண்ணெயும் பயன்படுத்தலாம்.

3. சீப்பு பயன்படுத்தி தலை வாறுவதில் தவறில்லை. ஆனால் அது தேவையும் இல்லை. கைகளால் கோதிவிடலாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மெல்லிய பற்களை உடைய சிறிய சீப்புகளை பயன்படுத்தலாம்.

4. குழந்தைகளுக்கு வாசனை திரவியங்கள் அவசியமே இல்லை. தவிர்ப்பது நல்லது.

5. நம்முடைய ஊரின் தட்பவெப்பத்துக்கு ஏற்றது பருத்தி ஆடைகள் மட்டுமே. சின்தடிக் பயன்படுத்துவது குழந்தைக்கு சவுகர்யமாக இருக்காது.

6. நாப்கின் அணிவிப்பத்தை கூடுமானவரையில் தவிர்ப்பதே நல்லது. வெளியில் தூக்கிச் செல்லும் போது மட்டும் பயன்படுத்துதல் நல்லது. டயாபரில் குழந்தை சிறுநீர் அல்லது மலம் கழித்துவிட்டு வெகு நேரம் அது சருமத்தில் படும் போது கெமிக்கல் ரியாக்ஷன் ஏற்படலாம். அது ஒவ்வாமை ராஷஸ் போன்ற பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.

7. பச்சிளம் குழந்தைகளை அழகுபடுத்த பொட்டு வைப்பார்கள். கெமிக்கல் கலந்த மை அல்லது சாந்து பயன்படுத்தும் போது அலர்ஜி ஏற்படலாம். டெர்மடைடஸ் வரலாம். தவிர்ப்பது நலம். வளையல், கொலுசு போன்ற நகைகள் குழந்தைக்கு உறுத்தலாக இருப்பதோடு தங்க நகைகளில் சிறிதளவு கலந்திருக்கும் நிக்கல் எனப்படும் உலோகம் சில குழந்தைகளுக்கு அலர்ஜியாகிவிடும். உங்கள் குழந்தைக்கு அது பிரச்னையில்லாமல் இருந்தால் அணிவிக்கலாம். போட்ட சில மணி நேரத்தில் அரிப்பு அலர்ஜி ஏற்பட்டால் தவிர்ப்பதே நல்லது.

8. இயற்கைக் காற்று தான் குழந்தைகளுக்கு நல்லது. ஹார்ம்லெஸ் கேஸ்களை பயன்படுத்தி இன்றைய நவீன ஏஸிக்கள் தயாரிக்கப்படுவதால், தவிர்க்க முடியாத சமயங்களில் பயன்படுத்துவது பிரச்னை தராது.

9. ஆறு மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். அதற்கு மேல் வீட்டில் தயார் செய்யப்படும் கஞ்சி கூழ், ஆப்பிள் போன்ற பழங்களை ஆவியில் வைத்து நன்றாக மசித்து தரலாம். நல்ல தரமான சீரியல்கள் கொடுக்கலாம்.

10. குழந்தைகளின் துணிகளைத் துவைக்க அதிகம் கெமிக்கல் இருக்கும் சோப்புகளையோ பவுடர்களையோ பயன்படுத்தக் கூடாது. மைல்ட் சோப்புகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும். குழந்தைகளின் துணிகளை துவைத்தபின் நன்றாக வெயில் படுமாறு காய வைத்தாலே போதுமானது. டெட்டால் கூட தேவையில்லை. அடிக்கடி பயன்படுத்தவேண்டாம்.
பச்சிளம் குழந்தை பராமரிப்பு  1. பச்சிளம் குழந்தைகளுக்கு பவுடர் பயன்படுத்தத் தேவையில்லை. பயத்த மாவு அல்லது வேறு எதுவும் பூச வேண்டாம். சருமத்தில் இருக்கும் துவாரங்கள் அடைத்துக் கொண்டால் பிரச்னை ஏற்படும். இயற்கையாக விட்டுவிடுதலே நலம்.  2. ஆயில் மசாஜ் செய்யலாம். வேப்பண்ணெய் தவிர்த்து வேறு எந்த எண்ணெயும் பயன்படுத்தலாம்.   3. சீப்பு பயன்படுத்தி தலை வாறுவதில் தவறில்லை. ஆனால் அது தேவையும் இல்லை. கைகளால் கோதிவிடலாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மெல்லிய பற்களை உடைய சிறிய சீப்புகளை பயன்படுத்தலாம்.  4. குழந்தைகளுக்கு வாசனை திரவியங்கள் அவசியமே இல்லை. தவிர்ப்பது நல்லது.  5. நம்முடைய ஊரின் தட்பவெப்பத்துக்கு ஏற்றது பருத்தி ஆடைகள் மட்டுமே. சின்தடிக் பயன்படுத்துவது குழந்தைக்கு சவுகர்யமாக இருக்காது.  6. நாப்கின் அணிவிப்பத்தை கூடுமானவரையில் தவிர்ப்பதே நல்லது. வெளியில் தூக்கிச் செல்லும் போது மட்டும் பயன்படுத்துதல் நல்லது. டயாபரில் குழந்தை சிறுநீர் அல்லது மலம் கழித்துவிட்டு வெகு நேரம் அது சருமத்தில் படும் போது கெமிக்கல் ரியாக்ஷன் ஏற்படலாம். அது ஒவ்வாமை ராஷஸ் போன்ற பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.   7. பச்சிளம் குழந்தைகளை அழகுபடுத்த பொட்டு வைப்பார்கள். கெமிக்கல் கலந்த மை அல்லது சாந்து பயன்படுத்தும் போது அலர்ஜி ஏற்படலாம். டெர்மடைடஸ் வரலாம். தவிர்ப்பது நலம். வளையல், கொலுசு போன்ற நகைகள் குழந்தைக்கு உறுத்தலாக இருப்பதோடு தங்க நகைகளில் சிறிதளவு கலந்திருக்கும் நிக்கல் எனப்படும் உலோகம் சில குழந்தைகளுக்கு அலர்ஜியாகிவிடும். உங்கள் குழந்தைக்கு அது பிரச்னையில்லாமல் இருந்தால் அணிவிக்கலாம். போட்ட சில மணி நேரத்தில் அரிப்பு அலர்ஜி ஏற்பட்டால் தவிர்ப்பதே நல்லது.  8. இயற்கைக் காற்று தான் குழந்தைகளுக்கு நல்லது. ஹார்ம்லெஸ் கேஸ்களை பயன்படுத்தி இன்றைய நவீன ஏஸிக்கள் தயாரிக்கப்படுவதால், தவிர்க்க முடியாத சமயங்களில் பயன்படுத்துவது பிரச்னை தராது.  9. ஆறு மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். அதற்கு மேல் வீட்டில் தயார் செய்யப்படும் கஞ்சி கூழ், ஆப்பிள் போன்ற பழங்களை ஆவியில் வைத்து நன்றாக மசித்து தரலாம். நல்ல தரமான சீரியல்கள் கொடுக்கலாம்.  10. குழந்தைகளின் துணிகளைத் துவைக்க அதிகம் கெமிக்கல் இருக்கும் சோப்புகளையோ பவுடர்களையோ பயன்படுத்தக் கூடாது. மைல்ட் சோப்புகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும். குழந்தைகளின் துணிகளை துவைத்தபின் நன்றாக வெயில் படுமாறு காய வைத்தாலே போதுமானது. டெட்டால் கூட தேவையில்லை. அடிக்கடி பயன்படுத்தவேண்டாம்.

Comments

Popular posts from this blog

8 Best CMSs for building a well structured social networking website

Manor House - Telscombe Village