Posts

Showing posts with the label summer-food

​​​​ கொத்தமல்லி கொத்தமல்லி

​​ என்ன சத்துக்கள்? கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாகும் அத்தனை சத்துக்களும் இதில் இருக்கிறது. 100 கிராம் கொத்தமல்லியிலுள்ள ஊட்டச் சத்து கலோரி 20 மாப்பொருள் 4 g - நார்ப்பொருள் 3 g கொழுப்பு 0.5 g புரதம் 2 g உயிர்ச்சத்து ஏ 337 μg 37% உயிர்ச்சத்து சி 27 mg 45% என்ன பலன்கள்? இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது. இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது. கொத்துமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த சூடு தணியும், சிறுநீர், வியர்வையைப் பெருக்கும். கண்கள் பலப்படும். பித்தத் தலைவலி நீங்கும் சளி, வறட்டு இருமல் மற்றும் மூக்கடைப்பு குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஒரு எளிய ரெசிபி - கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு வெண்ணெய் - 1 டீஸ்பூன் கார்ன் ஃப்ளார் - 2 டீஸ்பூன் உப்பு & மிளகுத...

கோடைகாலம் இப்பவே தொடங்கி விட்டது உசார் !!

​ காலை நேரங்களில் ஆப்பிள் ஜுஸ் சாப்பிட்டு வரலாம். நாள் முழுவதும் புத்துணர்வாக இருப்பதுடன் ஜீரண சக்தியும் அதிகரிக்கும். இது சருமத்தையும் மென்மையாக வைத்திருக்க உதவும்.வியர்வை நாற்றத்தைப் போக்க தினமும் பூலாங்கிழங்கு, சந்தனம் தேய்த்துக் குளித்து வந்தால் நாள் முழுவதும் வாசனையாக இருக்கும். தினசரி ஒரு தக்காளி சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடம்பும் தளதள வென்று இருக்கும். பேரீச்சம் பழத்தை வெண்ணையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரும்புச் சத்து கிடைக்கும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் தோலின் நிறத்தைப் பாதுகாக்க தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு வரவும். குளிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு வைத்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் உடம்புக்கு குளிர்ச்சி கிடைக்கும். இது கிருமி நாசினியாகவும் திகழ்கிறது. கண்கள் குளிர்ச்சி அடைய முருங்கைப் பூவை சமைத்து சாப்பிடலாம். ஒரு துணியில் முருங்கைப் பூவை இடித்துக் கட்டி கண்களின் மேல் 10 நிமிடம் வைக்கலாம். கண்கள் புத்துணர்ச்சியுடன் திகழும். நாள்தோறும் கேரட்டை பாலோடு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஜுஸ் செய்து சாப்பிட்டு ...

கோடை காலக் குறிப்புகள் - வெள்ளரிக்காய்

Image
சத்துக்கள் : ---------------- வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் நீர் உள்ளது. உணவில் உள்ள காரத்தால் இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்தாமல் சாப்பிட வெள்ளரிக்காய் உதவுகிறது. மீதி நான்கு சதவிகத்தில் புரதம், கொழுப்பு, மாவுச் சத்து, தாது உப்புக்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் பி ஆகிய அனைத்தும் இருக்கின்றன. வைட்டமின் சி யும் சிறிதளவு இதில் உள்ளது. காய்கறியிலேயே குறைவான கலோரி சக்தி உள்ளது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் 18 கிராம் கலோரிதான் கிடைக்கும். வெள்ளரிக்காயை சமைத்து சாப்பிடும்போது அதிலுள்ள பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்துவிடும். எனவே பச்சையாக கடித்துச் சாப்பிடலாம், அல்லது மிக்ஸியில் அரைத்து சாறாக்கியும் அருந்தலாம். பலன்கள் : -------------- வயிற்றுப் புண்ணுக்கு வெள்ளரிச் சாறு மிகவும் நல்லது. வறண்ட தோல், காய்ந்த முகம் உள்ளவர்கள் வெள்ளரிக்காய் சீசனில் தினமும் வெள்ளரிக்காய்ச் சாறு குடித்து தோல் வறட்சியை சரி செய்து கொள்ளலாம். வெள்ளரிக்காயில் உள்ள சுண்ணாம்புச் சத்து ரத்தக் குழாய் இறுக்கத்தைத் தளர்த்தி உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. ம...