கோடை காலக் குறிப்புகள் - வெள்ளரிக்காய்

சத்துக்கள் :
----------------

வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் நீர் உள்ளது. உணவில் உள்ள காரத்தால் இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்தாமல் சாப்பிட வெள்ளரிக்காய் உதவுகிறது. மீதி நான்கு சதவிகத்தில் புரதம், கொழுப்பு, மாவுச் சத்து, தாது உப்புக்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் பி ஆகிய அனைத்தும் இருக்கின்றன. வைட்டமின் சி யும் சிறிதளவு இதில் உள்ளது.

காய்கறியிலேயே குறைவான கலோரி சக்தி உள்ளது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் 18 கிராம் கலோரிதான் கிடைக்கும்.

வெள்ளரிக்காயை சமைத்து சாப்பிடும்போது அதிலுள்ள பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்துவிடும். எனவே பச்சையாக கடித்துச் சாப்பிடலாம், அல்லது மிக்ஸியில் அரைத்து சாறாக்கியும் அருந்தலாம்.

பலன்கள் :
--------------
வயிற்றுப் புண்ணுக்கு வெள்ளரிச் சாறு மிகவும் நல்லது.

வறண்ட தோல், காய்ந்த முகம் உள்ளவர்கள்
வெள்ளரிக்காய் சீசனில் தினமும் வெள்ளரிக்காய்ச் சாறு குடித்து தோல் வறட்சியை சரி செய்து கொள்ளலாம்.

வெள்ளரிக்காயில் உள்ள சுண்ணாம்புச் சத்து ரத்தக் குழாய் இறுக்கத்தைத் தளர்த்தி உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

மலச்சிக்கலுக்கு தினசரி இரண்டு வெள்ளரிக்காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும். குடல் எப்போதும் சுத்தமாக இருக்கும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளி, வறண்ட தோல், பரு முதலியவை குணமாக வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூச வேண்டும். இந்தப் பூச்சு முகத்தில் 15 நிமிடம் இருக்க வேண்டும். தொடர்ந்து இதைச் செய்தால் முகம் பொலிவடையும்.

ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு வாரங்கள் வரை வெள்ளரிக்காயை பயன்படுத்தலாம்
கோடை காலக் குறிப்புகள் - 2 --------------------------------------- வெள்ளரிக்காய் ---------------------  சத்துக்கள் : ----------------  வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் நீர் உள்ளது. உணவில் உள்ள காரத்தால் இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்தாமல் சாப்பிட வெள்ளரிக்காய் உதவுகிறது. மீதி நான்கு சதவிகத்தில் புரதம், கொழுப்பு, மாவுச் சத்து, தாது உப்புக்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் பி ஆகிய அனைத்தும் இருக்கின்றன. வைட்டமின் சி யும் சிறிதளவு இதில் உள்ளது.  காய்கறியிலேயே குறைவான கலோரி சக்தி உள்ளது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் 18 கிராம் கலோரிதான் கிடைக்கும்.   வெள்ளரிக்காயை சமைத்து சாப்பிடும்போது அதிலுள்ள பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்துவிடும். எனவே பச்சையாக கடித்துச் சாப்பிடலாம், அல்லது மிக்ஸியில் அரைத்து சாறாக்கியும் அருந்தலாம்.    பலன்கள் : -------------- வயிற்றுப் புண்ணுக்கு வெள்ளரிச் சாறு மிகவும் நல்லது.  வறண்ட தோல், காய்ந்த முகம் உள்ளவர்கள்  வெள்ளரிக்காய் சீசனில் தினமும் வெள்ளரிக்காய்ச் சாறு குடித்து தோல் வறட்சியை சரி செய்து கொள்ளலாம்.  வெள்ளரிக்காயில் உள்ள சுண்ணாம்புச் சத்து ரத்தக் குழாய் இறுக்கத்தைத் தளர்த்தி உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.  மலச்சிக்கலுக்கு தினசரி இரண்டு வெள்ளரிக்காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும். குடல் எப்போதும் சுத்தமாக இருக்கும்.  முகத்தில் உள்ள கரும்புள்ளி, வறண்ட தோல், பரு முதலியவை குணமாக வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூச வேண்டும். இந்தப் பூச்சு முகத்தில் 15 நிமிடம் இருக்க வேண்டும். தொடர்ந்து இதைச் செய்தால் முகம் பொலிவடையும்.  ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு வாரங்கள் வரை வெள்ளரிக்காயை பயன்படுத்தலாம்

Comments

Popular posts from this blog

8 Best CMSs for building a well structured social networking website

​ PHP Web Programming and Business Benefits of PHP Development