Posts

Showing posts with the label vaiko

வைகோ - வைராக்கியத்தின் அடையாளம்.

Image
வைகோ - வைராக்கியத்தின் அடையாளம். நடை தொடங்கி உடை வரை அத்தனை நேர்த்தி. வைரம் பாய்ந்த வைகோவுக்கு, வயது 68 என்றால் ஆச்சர்யமாகத்தானே இருக்கிறது! அப்படி என்னென்னதான் வைகோவின் ஆரோக்கிய ரகசியங்கள்? காலையில் ஆறு மணிக்கு எழுந்துவிடும் மனிதர், இரவு 11.30 மணிக்குத்தான் மீண்டும் படுக்கைக்குச் செல்வார். நள்ளிரவு தாண்டி உறங்கச் சென்றாலும், அதிகாலை விழிப்பு நேரம் தவறவே தவறாது. காலையில் இட்லி, மதியம் சாதம், அதனுடன் வேகவைத்த காய்கறிகள். கேரட்,பீன்ஸ் போன்ற காய்கறிகளை விரும்பிச் சாப்பிடுவார். இரவில் சப்பாத்தி. பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கு முன்பு கிரீன் டீ குடிப்பது வழக்கம். கார் பயணங்களின்போது பிஸ்கெட்களை விரும்பிச் சாப்பிடுவார். பிடித்த பழம் பப்பாளி. வேகவைத்த வேர்க்-கடலை என்றால் கொள்ளை இஷ்டம். காலையில் வாக்கிங். ஒரு நாளும் இதற்கு விடுப்பு கிடையாது. அதனாலோ என்னவோ... நடைப்பயணம் என்றால், அப்படி ஓர் அலாதி ஆர்வம் இவருக்கு. மேடையில் பேச எவ்வளவு நேரம் தாமதம் ஆனாலும், மைக் பிடிக்கும்வரை சாப்பிடவே மாட்டார். பசியோடு மைக் பிடித்தால்தான் 'கணீர்' என கம்பீரமாகப் பேச முட...