Posts

Showing posts with the label politics

தப்பித் தவறிக் கூட `sun direct’ வாங்காதீங்க!

Image
ஆட்டம் காணும் `சன்’ கும்பல்! தப்பித் தவறிக் கூட `sun direct’ வாங்காதீங்க! ------------------------------ ------------------------------ ---- எங்கள் ஏரியா கேபிள் களில் புதிய தலைமுறை சேனல் தெரிவதில்லை. ``சரி செட் டாப் பாக்ஸ் இணைப்பு எடுத்தால் தெரியுமா..’’ என்று கேபிள்காரர்களிடம் கேட்டால், ``நாங்க SCV சார்.. புதிய தலைமுறை சேனலை காட்டக்கூடாதுங்குறது எங்களுக்கு போடப்பட்ட உத்தரவு சார்” என்றார். இது எப்படி இருக்கு.. பணம் கொடுக்குறது நாம.. ஆனா நாம எந்த சேனலை பார்க்கணும்னு சன் கும்பல் நமக்கு உத்தரவு போடுது. புதிய தலைமுறை சேனலைக் கண்டு சன் டிவி கும்பல் எவ்வளவு ஆடிப்போயிருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. அவங்க சிறப்பா செய்தி கொடுக்குறாங்க.. அதனால் மக்கள் பெரும்பாலும் புதிய தலைமுறையை பார்க்கிறார்கள். அதற்கு போட்டியாக சன் டிவியும் தங்களது செய்தி தரத்தை உயர்த்தினால் மக்கள் பார்ப்பார்கள். மாறாக போட்டிச் சேனலை அதிகார பலத்தின் மூலம் இருட்டடிப்பு செய்வது அயோக்கியத்தனம். தாங்கள் கொடுப்பது தான் செய்தி என்று அகம்பாவம் பிடித்து நின்ற சன் கும்பல் இன்று எல்லா தரப்பு செய்திகளையும் காட்ட...

வைகோ - வைராக்கியத்தின் அடையாளம்.

Image
வைகோ - வைராக்கியத்தின் அடையாளம். நடை தொடங்கி உடை வரை அத்தனை நேர்த்தி. வைரம் பாய்ந்த வைகோவுக்கு, வயது 68 என்றால் ஆச்சர்யமாகத்தானே இருக்கிறது! அப்படி என்னென்னதான் வைகோவின் ஆரோக்கிய ரகசியங்கள்? காலையில் ஆறு மணிக்கு எழுந்துவிடும் மனிதர், இரவு 11.30 மணிக்குத்தான் மீண்டும் படுக்கைக்குச் செல்வார். நள்ளிரவு தாண்டி உறங்கச் சென்றாலும், அதிகாலை விழிப்பு நேரம் தவறவே தவறாது. காலையில் இட்லி, மதியம் சாதம், அதனுடன் வேகவைத்த காய்கறிகள். கேரட்,பீன்ஸ் போன்ற காய்கறிகளை விரும்பிச் சாப்பிடுவார். இரவில் சப்பாத்தி. பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கு முன்பு கிரீன் டீ குடிப்பது வழக்கம். கார் பயணங்களின்போது பிஸ்கெட்களை விரும்பிச் சாப்பிடுவார். பிடித்த பழம் பப்பாளி. வேகவைத்த வேர்க்-கடலை என்றால் கொள்ளை இஷ்டம். காலையில் வாக்கிங். ஒரு நாளும் இதற்கு விடுப்பு கிடையாது. அதனாலோ என்னவோ... நடைப்பயணம் என்றால், அப்படி ஓர் அலாதி ஆர்வம் இவருக்கு. மேடையில் பேச எவ்வளவு நேரம் தாமதம் ஆனாலும், மைக் பிடிக்கும்வரை சாப்பிடவே மாட்டார். பசியோடு மைக் பிடித்தால்தான் 'கணீர்' என கம்பீரமாகப் பேச முட...