​​​​ கொத்தமல்லி கொத்தமல்லி

​​

என்ன சத்துக்கள்?

கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாகும் அத்தனை சத்துக்களும் இதில் இருக்கிறது.

100 கிராம் கொத்தமல்லியிலுள்ள ஊட்டச் சத்து

கலோரி 20
மாப்பொருள் 4 g
- நார்ப்பொருள் 3 g
கொழுப்பு 0.5 g
புரதம் 2 g
உயிர்ச்சத்து ஏ 337 μg 37%
உயிர்ச்சத்து சி 27 mg 45%

என்ன பலன்கள்?

இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது. இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது.

கொத்துமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த சூடு தணியும், சிறுநீர், வியர்வையைப் பெருக்கும்.

கண்கள் பலப்படும். பித்தத் தலைவலி நீங்கும்

சளி, வறட்டு இருமல் மற்றும் மூக்கடைப்பு குணமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஒரு எளிய ரெசிபி -

கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
கார்ன் ஃப்ளார் - 2 டீஸ்பூன்
உப்பு & மிளகுத் தூள் - தேவைக்கேற்ப
பிரெட் துண்டு - 1
தண்ணீர் - 2 கப்.

எப்படிச் செய்வது?

பிரெட்டை மிக்சியில் பொடிக்கவும். அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். கார்ன்ஃப்ளாரை சிறிது தண்ணீரில் கரைத்து அதில் சேர்க்கவும். வெண்ணெயும் சேர்க்கவும். கார்ன்ஃப்ளார் சேர்த்ததும், கலவை கெட்டியாக ஆரம்பிக்கும். ரொம்பவும் கெட்டியாவதற்குள், அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைச் சேர்த்து இறக்கி, உப்பும் மிளகுத்தூளும் சேர்த்துப் பரிமாறவும்

சூடான சுவையான மல்லி சூப் ரெடி!
​​

Comments

Popular posts from this blog

8 Best CMSs for building a well structured social networking website

Manor House - Telscombe Village