2030ல் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறும்: அமெரிக்க அறிக்கையில் தகவல்

வாஷிங்டன்: வரும் 2030ம் ஆண்டில் இந்தியா பொருளாதார வல்லரசாக இருக்கும் எனவும், சீனாவை மிஞ்சி உலக பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் எனவும் அமெரிக்க புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், இந்தியாவும், சீனாவும் இணைந்து செயல்பட முடியாது. தற்போது பொருளாதாரத்தில் இந்தியாவை விடசீனா முன்னிலையில் இருக்கலாம். ஆனால் இந்தியாவுக்கான வாய்ப்பு 2015ம் ஆண்டு வருகிறது. வரும் 2030ம் ஆண்டிற்கு பிறகு, ஆசியாவிற்கே தூண்டுகோலாக இருக்கும் இந்தியா, சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல் உலக அதிகாரமுள்ள நாடாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அமெரிக்க உளவு நிறுவனம் குளோபல் டிரென்ட் 2030 என்ற தலைப்பின் கீழ் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் பாகிஸ்தான் பற்றிய பேச்சே இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது.

வரும் 2020ம் ஆண்டில் மக்கள் தொகையில் சீனாவில் அதிகம் பேர் இந்தியர்களை விட மூத்தவராக இருப்பர். அந்த காலகட்டத்தில் சீனாவின் பொருளாதாரம் குறைய துவங்கும் நேரத்தில், இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்கும். தற்போது உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இருக்கும் இந்தியாவை விட முன்னணியில் இருக்கும் சீனா, 2030ம் ஆண்டிற்கு பின் இந்த நிலை மாறும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க துவங்கும் நேரத்தில் சீனாவின் வளர்ச்சி குறையும். 2030ம் ஆண்டில் இந்தியா பொருளாதாரத்தின் வல்லரசாக இருக்கும். சீனாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி 8 முதல் 10 சதவீதம் வரை உள்ளது இது குறைய துவங்கும்.

தற்போது சீனாவில் உச்சத்தில் இருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறையும். 2030ம் ஆண்டில் 994 மில்லியன் தொழிலாளர்களிலிருந்து 961 மில்லியனாக குறையும். அதேநேரத்தில், இதற்கு மாறாக இந்தியாவில் 2050ம் ஆண்டு வரை வேலை பார்ப்போர்களின் எண்ணிக்கை உச்சத்தில் இருப்பதற்கு சாத்தியமில்லை. இந்தியர்களுக்கு தற்போது நடுத்தர வயதாக 26 இருக்கிறது. இது 2030ம் ஆண்டில் 32 ஆக இருக்கும். இது தற்போது பொருளாதாரத்தில் முதல் 10 இடங்களில் இருப்பதை விட குறைவாகும்.

2030ம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில், நடுத்தர வர்க்கத்தினர் அதிக அளவில் நுகர்வோராக இருப்பார்கள். இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனைவிட அதிகமானது. ஆனால் இந்தியா மற்றும் சீனா நாடுகள் அடிப்படை தேவைகளான உணவு, தண்ணீர் மற்றும் எரிசக்தி பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை எனறால், ஒட்டு மொத்த வருமானத்தில், நடுத்தர வருமானம் உடையவர்கள் தொடர்பான பிரச்னையில் சிக்க வாய்ப்புகள் உள்ளது. பொருளாதார தொடர் வளர்ச்சியை தொடர அறிவியல் துறைகளில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

8 Best CMSs for building a well structured social networking website

Manor House - Telscombe Village