வாயுத் தொல்லை ஏற்படக் காரணம்
வாயுத் தொல்லை! இந்தப் பிரச்சினை இல்லாத மனுஷங்களே இருக்க முடியாது. எத்தனை பெரிய ஆளா இருந்தாலும், தர்மசங்கடத்துல தர்ற பிரச்சினை இது.
ஒருத்தர் ஒரு நாளைக்கு ஆசன வாய் வழியா 14 முறை வாயுவை வெளியேத்தறது சாதாரணமானதுன்னு சொல்றாங்க மருத்துவர்கள்.
இந்த வாயுத் தொல்லை ஏன் வருது?
உணவு செரிமானமாகி, வயித்துலேர்ந்து சிறுகுடலுக்குப் போகும். மீதி உணவு பெருங்குடலுக்குத் தள்ளப்படும். அந்த மிச்ச உணவில் ஆபத்தில்லாத பாக்டீரியா கிருமிகள் நிறைய இருக்கும். மிச்ச மீதி உணவோட, அந்த பாக்டீரியா சேர்ந்து, உணவு புளிச்சு, வாயுவா மாறுது. இந்த வாயுவில் நாற்றம் இல்லாதவரைக்கும் பிரச்சினை இல்லை. நாற்றமும் சத்தமும் அதிகமானா, அது ஏதோ உடல்நலக் கோளாறுக்கான அறிகுறினு எடுத்துக்கலாம். அதை சாப்பாடு மூலமா சரி செய்யலாம்.
அதுக்கு முன்னாடி வாயுவை உற்பத்தி பண்ற உணவுகளைப் பத்திப் பார்க்கலாம். அளவுக்கதிகமாக வாயுவை உற்பத்தி செய்கிற உணவுகள், மிதமான வாயுவை உற்பத்தி பண்ற உணவுகள், குறைந்த வாயுவை வெளியேத்தற உணவுகள்னு மூணு வகை. முதல் வகைல பால் மற்றும் பால் பொருள்கள், பிராக்கோலி, காலிஃப்ளவர், குட்டி முட்டைகோஸ், பீன்ஸ், பட்டாணி, வெங்காயம், சோயா பீன்ஸ், டர்னிப், சோளம், உருளைக்கிழங்கு, ஓட்ஸ், கோதுமை. இரண்டாவது வகைல ஆப்பிள், வாழைப்பழம், கேரட், கத்தரிக்காய், செலரி மற்றும் பிரெட். கடைசி வகைல முட்டை, மீன், ஆட்டிறைச்சி, எண்ணெய், அரிசி.
வாயுத் தொல்லையிலிருந்து தப்பிக்க என்ன வழி?
சமைச்ச உணவு சாப்பிடறப்ப கூடவே பச்சைக் காய்கறி, பழங்களை சாப்பிடக் கூடாது. பழம், பச்சைக் காய்கறி சாப்பிட்டு, கொஞ்ச இடைவெளி விட்டு, அப்புறம் சமைச்ச உணவை எடுத்துக்கிறது நல்லது. காய்கறி, பழங்களில் நார்ச்சத்து அதிகம். அது சமைச்ச உணவோட சேர்ந்து சீக்கிரம் செரிச்சு, புளிச்சு, வாயுவை உண்டாக்கும்.
சில பேர் அவசரம் அவசரமா சாப்பாட்டை விழுங்குவாங்க, அப்ப காற்றையும் சேர்த்து விழுங்கறதும் வாயுவுக்கான காரணம். மலச்சிக்கல் இன்னொரு காரணம், தினம் காலை எழுந்ததும் மலம் கழிக்கிறதைப் பழக்கப்படுத்திக்கிறவங்களுக்கு வாயுத் தொல்லை குறைவு.
சாப்பிட்ட உடனேயே வாயு வெளியேறாது. 3 முதல் 5 மணி நேரத்துக்குப் பிறகுதான் வரும். வாயுவுக்கு எதிரா போராடுற குணம் கொண்ட உணவுகள் பூண்டு, இஞ்சி, சோம்பு, ஓமம். வாயு அதிகம்னு தெரிஞ்ச உணவுகள்ல இதையெல்லாம் சேர்த்து சமைக்கிறப்ப, பிரச்சினை குறையும்.
சுண்டல் சாப்பிட்டா வாயுப் பிரச்சினை வரும். சுண்டலுக்கான தானியத்தை ஊற வச்சிட்டு, அந்தத் தண்ணியை வடிச்சு, வேற தண்ணி மாத்தி, கொஞ்சம் இஞ்சி சேர்த்து பிரஷர் குக் செய்யலாம். இல்லைனா சுண்டலுக்கான கடலையை வெறும் கடாய்ல லேசா வறுத்துட்டு, இளம் சூடான தண்ணீர் விட்டு ஊற வச்சு, வடிச்சு வேக வச்சும் செய்யலாம். முக்கியமா அதோட மேல் தோல் உடையற அளவுக்கு வேக வைக்கணும்.
பழகாத எந்தப் புது உணவையும் ஒரே நாள்ல நிறைய சாப்பிடாம, கொஞ்சம் கொஞ்சமா முயற்சி பண்றதும் நல்லது. பார்ட்டி, விசேஷம்னு முதல்நாள் நிறைய சாப்பிட்டவங்களுக்கு, அடுத்த நாள் வாயுப் பிரச்சினை அதிகமாக இருக்கும். பசியிருக்காது. அந்த நேரத்துல இஞ்சி முரபா, இஞ்சி சிரப், இஞ்சி சூரணம்னு எதையாவது எடுத்துக்கிறது உடனடி பலன் தரும்.
கிழங்கு சாப்பிட்டா முதுகு பிடிச்சிருச்சு, கடலை சாப்பிட்டா கை, கால் பிடிச்சிருச்சு, வாயுனு சொல்றவங்களை நிறைய பார்க்கலாம். உண்மைல வாயுங்கிறது வயித்துப்பகுதில மட்டும்தான் இருக்கும். முதுகுப் பிடிப்பு மாதிரி மத்த பிரச்சினைகளுக்கு காரணம் வேற ஏதாவது இருக்கலாம்.
-நலம், நலம் அறிய ஆவல்
Comments
Post a Comment