நாம் எப்படி வெற்றியை அளப்பது? (How do we measure success?)

ஒரு வேலையை நன்றாகச் செய்து முடித்துவிட்டோம் என்ற உணர்வாலும், குறிக்கோளை உண்மையிலேயே அடைந்துவிட்டோம் என்ற உணர்வாலுமே உண்மையான வெற்றி அளக்கப்படுகிறது.

வாழ்வில் நமது பதவியை வைத்து வெற்றி அளக்கப்படுவதில்லை. ஆனால் அந்தப் பதவியை அடைவதற்கு நாம் கடந்து வந்த தடைகளை வைத்தே அது அளக்கப்படுகிறது.

பிறரோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை வைத்து வாழ்வில் வெற்றி என்பது தீர்மானிக்கப்படுவதில்லை. ஆனால் நாம் உண்மையிலேயே கொண்டுள்ள வல்லமையோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் நாம் எந்த அளவிற்கு அதை நமது வாழ்வில் உபயோகிக்கிறோம் என்பதை வைத்தே வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.

வெற்றி பெறும் மக்கள் தங்களுடனேயே போட்டியிட்டுக் கொள்கின்றனர். அவர்கள் தங்களது சாதனைகளைச் சிறந்ததாக்கிக் கொள்வதோடு, தொடர்ந்து இடைவிடாது மேம்படுத்திக் கொண்டும் இருப்பார்கள்.

வெற்றி என்பது வாழ்வில் நாம் எவ்வளவு உயர்ந்திருக்கிறோம் என்பதைக் கொண்டு அளக்கப்படுவதில்லை. ஆனால் நாம் விழும்போது எத்தனை முறை மீண்டும் உடனே எழுந்து நிற்கின்றோம் என்பதைக் கொண்டே அளக்கப்படுகிறது.

மீண்டும் மீண்டும் எழும் இந்தத் திறமையே வெற்றியைத் தீர்மானிக்கிறது.

Comments

Popular posts from this blog

8 Best CMSs for building a well structured social networking website

Manor House - Telscombe Village