உடல் எடை குறைய ...


இரவு 7 மணிக்குள் சாப்பிட்டுவிடுங்கள். அதுவும் அரை வயிறு மட்டும் சாப்பிடுவது நல்லது. இரவில் அரிசி உணவு வேண்டாம். இதைக் கடைப்பிடித்தாலே, ஒரே மாதத்தில் மூன்று கிலோ எடை குறைவது நிச்சயம்.

வாரத்துக்கு ஐந்து நாட்கள் தினமும் இரண்டு மணி நேரம் ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடுங்கள். கலோரி எரிக்கப்பட்டு, உடல் கச்சிதமாக இருக்கும்.
http://1funny.com/wp-content/uploads/2010/04/big-belly.jpg
வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டுக் கோலா குடிப்பது இன்றைய ஃபேஷனாகிவிட்டது. ஒரு காபியில் ஒன்றரை தேக்கரண்டி சர்க்கரைதான் சேர்க்கிறோம். ஒரு கோலா பாட்டிலில் 8 தேக்கரண்டி சர்க்கரை இருக்கிறது. எனவே, குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது.

உணவுக் கட்டுப்பாடும் உரிய உடற்பயிற்சியும் மேற்கொண்டாலே உடல் எடை நிச்சயம் குறையும். சாப்பாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டாலே, உடல் கட்டுக்கோப்புக்கு வந்துவிடும்

Source:- Dr.Vikatan
 

Comments