Skip to main content

டம்ளரை கீழே வைக்க வேண்டியதுதான் !!!

நீருடன் கூடிய கண்ணாடி டம்ளரைக் காட்டி மாணவர்களிடம் பேராசிரியர் கேட்டார்.
- இது எவ்வளவு எடை?
- 50கி: 100கி: 125கி – இப்படி பல பதில்கள் வந்தன.
- பேராசிரியர் சொன்னார், “எனக்கும் என்ன எடை என்பது தெரியாது. ஆனால் இதை சிறிது நேரம் தூக்கி பிடித்திருந்தால் என்னாகும்?”.
- “ஒண்ணுமில்லை” – மாணவர்கள்
- “சரி. ஒரு மணிநேரம் தூக்கினால்” – பேராசிரியர்.
- “கை வலிக்கும்.” – மாணவர்கள்
- “சரி. ஒரு நாள் முழுதும் தூக்கினால்,,?” – பேராசிரியர்.
- “கை கடுமையாக வலித்து செயல்பட முடியாமல் போகும். மருத்துவரிடம் போய் சரி செய்ய வேண்டியதுதான்” – மாணவர்கள்.
- டம்ளரின் எடை ஒருநாள் ஆனாலும் அதே எடைதான். ஆனால் கையின் பாதிப்போ பல மடங்குகள். இப்போ நான் என்ன செய்தால் சரி?”.
- “டம்ளரை கீழே வைக்க வேண்டியதுதான்”
- “பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதை இறக்கி வைக்க கற்றுக் கொண்டால், குறிப்பாக படுக்கும் முன்னர் ஒதுக்கிவிட்டு உறங்கினால், அடுத்த நாள் உற்சாகமான வாழ்க்கை பிறக்கும்.

Comments

Popular posts from this blog

8 Best CMSs for building a well structured social networking website

​ PHP Web Programming and Business Benefits of PHP Development