​​​​ நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ. .!


​​
நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ. .!
--------------- --------------- --------------- -----
சப்பாத்திய கைல பிச்சு சாப்டுவோம்
ஆனா, சாதத்த ஸ்பூன்-ல மட்டும் தான்
சாப்டுவோம்
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்
வெளில போனா மினரல் வாட்டர்-ல முகம்
கழுவுவோம்.
வீட்டுக்குள்ள, உப்பு தண்ணி நாளும்
ஒன்னும் சொல்லாம குடிப்போம்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்
காஸ்ட்லி சாப்பாடு ஆடார் பண்ணி காச
குடுப்போம்
அது கம்மிய இருந்தாலும் முழுசாதிண்ண
மாட்டோம்
​​
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்
கம்பெனி காசுனா காஸ்ட்லி சரக்கடிப்போம்
கை காசுனா ஓல்டு மாக்குனாலும்
யோசிக்க மாட்டோம்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்
லேப்டாப் இல்லாம நாங்க இருக்க
மாட்டோம்
ஆனா, படம் பாக்கறத தவிர வேற எதுக்கும்
பயன்படுத்த மாட்டோம்
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்
டேட்டா கார்டு இல்லாம ட்ராவல் பண்ண
மாட்டோம்
ட்ரெயின்ல போனாலும்சீன் போட மறக்க
மாட்டோம்
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்
அடிக்கடி ஹைஜீனிக்கபத்தி பேசுவோம்
அதேபோல சரக்கடிச்சிட்டு ­
சாக்கடையிலும் கெடப்போம்
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்
மூச்ச போட்டு மீட்டிங்க்ல பேசுவோம்
அது முடுஞ்சதுமே மொக்கேன்னு சொல்லி
ஏனா நாங்க சாப்ட்வேர் எஞ்சினியர்
ஆண் சைட் போயி அடிமையா கெடப்போம்
ஆனா பில்டப்பு மட்டும்
பெருசா குடுப்போம்
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்
(பெண்களுக்காக சில...)
ஊர்ல இருந்தா, சுடிதார், மருதாணி,
மஞ்சள், மல்லிக பூ
ஊற கடந்தா ஜீன்ஸ், டி-ஷர்ட், ஸ்லீவ்
லெஸ், லோ நெக்
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்
இப்ப facial லும் பல, ஹேர் வாசும் சில
ஆனா பிளாஷ் பேக் போனமீரா சீகக்காய்
மட்டும் தான்
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்
உப்மா செஞ்சத ஊருக்கே தெரிய
பேஸ்புக்குல போடுவோம்
அதையும் மதிச்சு, ஆங்கில அகராதில
உள்ள அணைத்து வார்த்தைகளையும் ­
கண்டுபிடிச்சு amazing, fabulous, fantastic
னு
பீட்டர குடுப்போம்
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்
இதெல்லாம் சொல்றத கூட சுத்த தமிழ்ல
சொல்ல மட்டோம்ங்க
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்
ஆம், சொந்த
அடையாளங்களை வெள்ளைக்காரனிடம ்
விற்று விட்டு
போலி வாழ்க்கை வாழும்
பொறியாளர்கள்..!
​​

Comments

Popular posts from this blog

8 Best CMSs for building a well structured social networking website

Website