Software Engineers மொத்தம் ரெண்டு வகை , காலைல 8 மணிக்கு ஆபீஸ் வந்துட்டு switch போட்ட grinder மாதிரி , night வரைக்கும் உக்காந்து எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சுட்டு ,work pressure னு வீட்ல போய் அம்மா , அப்பா , பொண்டாட்டி கூட சண்ட போட்டுட்டு படுத்து தூங்கறவங்க மொத கோஷ்டி . இவங்க , அவங்களா உழைச்சு , increment வாங்கி , onsite போய் , சம்பாரிச்சு , மண்டைல முடி கொ ட்டி , கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிருவாங்க .... இவங்களுக்கு நம்ம அட்வைஸ் ஏதும் தேவை இல்ல .... ரெண்டாவது கோஷ்டி : வேல செய்ய புடிக்காம , கடுப்புல வந்து , ஏனோ தானோன்னு வேல செஞ்சு , increment இல்லாம ,onsite இல்லாம , வீட்ல , ' சாப்பாட்ல உப்பு இல்லன்னு ' சொன்னா ,' PCS/Cunfosys/GTS/JCL ல தான வேல செய்யற ??' ன்னு நக்கல் பேச்சுக்கு ஆள் ஆகி , தினமும் Manager கிட்ட 'You have to put some extra efforts man' ன்னு பேச்சு வாங்கிட்டு இருக்கற 73% பேரு .... இவங்கல்லாம் கஷ்டப்பட்டு வேல செய்யாமலே ...