வேர்கடலை... ஏழைகளின் புரதம்...!


வேர்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளது. புரதம், லைசின் என்ற அமினோ அமிலம் உள்ளது. இந்தப் புரதம் முட்டை மற்றும் மாமிசத்தில் இருந்து கிடைக்கும் புரதத்திற்கு இணையானது. அதனால் வேர்க்கடலை வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கிறது.
எப்படி சாப்பிடலாம்?

சமையலில் பல வித உபயோகங்கள் உள்ளது வேர்க்கடலையை சமைக்காமலேயே பச்சையாக தோலூரித்து உண்ணலாம். இல்லை வறுத்து உப்புடன் சாப்பிடலாம். அல்லது வேக வைத்தும் சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் மிகவும் சுவையாக இருக்கும். வேர்க்கடலையை ஏற்கனவே சமைத்த உணவுகளுடன் சேர்த்தால் அவற்றின் சுவை கூடும்.

அவித்த வேர்க்கடலையில் சாலட் செய்து சாப்பிடலாம். வெல்லம் சேர்ந்து வேர்க்கடலை பர்பி செய்து சாப்பிடலாம்.

என்ன பலன்கள்?

வேர்கடலையை வேக வைத்து சாப்பிட, உடல் பருமன் குறையும், அதையே வறுத்துச் சாப்பிட உடல் எடை கூடும். ரத்தம் ஓட்டம் சீராகும். ரத்த அழுத்தம் குறையும். நரம்புகள் நன்றாகச் செயல்படச் செய்யும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன் களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது. புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்கள் அழிய‌ உதவும்.

பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்கும் விட்டமின் பி3 (நியாசின்) அதிகம் இருப்பதால் மூளைக்கும், இரத்த ஒட்டத்திற்கும் நல்லது. கர்ப்பிணிகளுக்கு நல்லது.

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்குப் புரதச்சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச்சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன.
வேர்கடலை... ஏழைகளின் புரதம்...!    வேர்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளது. புரதம், லைசின் என்ற அமினோ அமிலம் உள்ளது. இந்தப் புரதம் முட்டை மற்றும் மாமிசத்தில் இருந்து கிடைக்கும் புரதத்திற்கு இணையானது. அதனால் வேர்க்கடலை வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கிறது.  எப்படி சாப்பிடலாம்?    சமையலில் பல வித உபயோகங்கள் உள்ளது வேர்க்கடலையை சமைக்காமலேயே பச்சையாக தோலூரித்து உண்ணலாம். இல்லை வறுத்து உப்புடன் சாப்பிடலாம். அல்லது வேக வைத்தும் சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் மிகவும் சுவையாக இருக்கும். வேர்க்கடலையை ஏற்கனவே சமைத்த உணவுகளுடன் சேர்த்தால் அவற்றின் சுவை கூடும்.    அவித்த வேர்க்கடலையில் சாலட் செய்து சாப்பிடலாம். வெல்லம் சேர்ந்து வேர்க்கடலை பர்பி செய்து சாப்பிடலாம்.    என்ன பலன்கள்?    வேர்கடலையை வேக வைத்து சாப்பிட, உடல் பருமன் குறையும், அதையே வறுத்துச் சாப்பிட உடல் எடை கூடும். ரத்தம் ஓட்டம் சீராகும். ரத்த அழுத்தம் குறையும். நரம்புகள் நன்றாகச் செயல்படச் செய்யும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன் களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது. புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்கள் அழிய‌ உதவும்.    பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்கும் விட்டமின் பி3 (நியாசின்) அதிகம் இருப்பதால் மூளைக்கும், இரத்த ஒட்டத்திற்கும் நல்லது. கர்ப்பிணிகளுக்கு நல்லது.    வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்குப் புரதச்சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச்சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன.

Comments

Popular posts from this blog

8 Best CMSs for building a well structured social networking website

Fallingwater House Tour